Map Graph

திருச்சி மலைக் கோட்டை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோட்டை

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம்,குரும்பர், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கியப் பங்கு வகித்துள்ளது.

Read article
படிமம்:The_tank_and_Rockfort_Trichinopoly.jpgபடிமம்:திருச்சி_மலைக்கோட்டையில்_விநாயகர்_சதுர்த்தித்_திருவிழா.JPGபடிமம்:நூற்றுக்கால்_மண்டபம்.jpgபடிமம்:Commons-logo-2.svg
Nearby Places
Thumbnail
சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பேருந்து நிலையம்
Thumbnail
திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
திருச்சி தெப்பகுளம்
புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கல்லூரி
சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
சிங்காரத்தோப்பு
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி